
ரொம்ப நாட்களுக்குப் பிறகு, அம்மாவின் தொல்லை தாங்காம, நம்ம T nagar மார்க்கெட் போய் காய்கறி வாங்கினேன்.
" கோஸ் அரை கிலோ எவ்ளோ அண்ணா?" - நான்
" கிலோ கணக்கு லாம் வராது. முழுசா தான் போடுவேன். என்னா சொல்ற?" - மிஸ்டர். கடைக்காரர் :-)
சிரித்து விட்டு, வேற காய் வாங்கும் போது, சரி இத பத்தி ஒரு ப்ளோக்எழுதலாம்னு ஒரு ஐடியா. So here I come! -
அந்த காலத்துல வாழ இலை விக்கறவங்க "வாழலை!வாழலை!" னு சத்தம்போட்டு வாழை இலை வித்துக்கிட்டு போவாங்களாம். இது கேக்க கொஞ்சம்negative அ இருக்கறதுனாலே யாரும் கெட்ட சகுனமா இத நினைச்சுடகூடாது இல்ல. அதனால பின்னாடியே வேற ஒரு சின்ன பொண்ணு"வாழக்கா! வாழக்கா!" னு வாழை காய் வித்துட்டு போவாளாம். இதான்இப்ப நாம சொல்ற customer satisfaction :)
இந்த நேரத்தில என் தமிழ் ஐயா சொன்ன ஒரு கதை ஞாபகம் வருது. ஒருபெரியவர் தெருல நடந்து போயக்கிட்டு இருந்தாராம். அப்போ அந்த பக்கம்வந்த ஒரு காய்கறி விக்கற அம்மா, "அர க்கிற- சிரிக்கிற- மானத்தகலைக்கறே! " அப்டினு கத்துனாங்களாம். நம்ம ஆளு பதறி போய் "என்னமா சொல்ற? நான் எதுவும் பண்லியே" அப்படினு சொன்னார். அந்தஅம்மா சிரிச்சுக்கிட்டே, " அட! நான் அரை கீரை, சிறு கீரை, மணதக்காளிகீரை னு கத்துனேன்” னு சொன்னாங்களாம்.
நண்பன் ஒருத்தன் கூட ஒரு வாக்குவாதம். "ஆயிரக்ககணக்குல செலவுபண்ற ஒரு துணிக் கடைலயோ, நகை கடைலயோ பேரம் பேச மாட்டீங்க.ஆனா 5 ரூபாய் கீரை கடைல பேரம் பேசுவீங்க" என்றேன் நான். நண்பன்பதில்: "அது அப்படி இல்லடா. பெரிய துணி கடைக்கு வெல என்னனுதெரிந்சு தான் மக்கள் வறாங்க. இங்க இல்லனா வேற கடைல போய் துணிஎடுபாங்க. ஆனா கீரைய நான் ரெண்டு ரூபா அதிகம் குடுத்து 7Rs குவாங்குனா, அந்த கீரைக்கார அம்மா நாளைக்கு, 5Rs கு கீரை கேக்கற வேறயாருக்கும் கீரை குடுக்க மாட்டாங்க. என்ன மாதிரி 7 ரூபாய்க்கு வாங்கறமக்களுக்கு மட்டும் தான் விப்பாங்க. நான் பேரம் பேசறது எனக்காக இல்ல.கீரை வேலை ஏறிட கூடாது அப்டிங்ற நல்ல எண்ணத்துல :)" என்றான். "நல்லா சமாளிக்கறடா" என்றேன் நான் :)
காய் வாங்கறது Jolly அனுபவம். அத பத்தி தமிழ் ல blog பண்றது, இன்னும் jolly அனுபவம்.
பிரிவோம்-சந்திப்போம் :)